ADDED : டிச 29, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி அருகே ஏ.புனவாசல் - சிறுகுடி சாலையில் ஏந்தல் பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிர மூர்த்தி கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து கருப்பண்ணசுவாமி சன்னதி அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
அங்கிருந்த பொன்னந்தி காளியம்மன் அருகே உள்ள உண்டியலை உடைத்தும், கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
இது குறித்து கடலாடி போலீசில் கோயில் நிர்வாகி பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது விசாரிக்கிறார்.

