/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு
/
தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு
தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு
தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு
ADDED : டிச 29, 2025 06:44 AM
தேவிபட்டினம்: பள்ளிகள் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்திற்கு, தொடர் விடுமுறை தினம் என்பதால், கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக வெளியூர்களில் இருந்து ஐயப்ப, முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். வழக்கமான நாட்களை விட தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக, பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.