UPDATED : அக் 12, 2026 07:57 PM
ADDED : அக் 12, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே திருத்தேர்வளை மேலக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்., 17 ல் நடந்தது.
தினமும் மூலவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று மண்டல பூஜை விழா நடைபெற்றது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது.
