தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது


UPDATED : அக் 12, 2026 07:57 PM

ADDED : அக் 12, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:57 PM ADDED : அக் 12, 2026 07:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் எஸ்.ஐ., செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது காருகுடி பகுதியில் 4 யூனிட் ஆற்று மணலுடன் வந்த லாரியை மடக்கி விசாரித்தனர். காருகுடியை சேர்ந்த ராமன் மகன் கதிரேசன் 38, தேர்த்தங்கல் லாடசாமி மகன் செல்வ பிரபாகரன் 39, லாரி டிரைவர் பாண்டியூர் சாமிதுரை 45, ஆகியோரிடம் விசாரித்தனர்.

அதில் கதிரேசன் வீடு கட்டுவதற்காக அரசு அனுமதியின்றி பாண்டியூர் வைகை ஆற்றில் மணல் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் மீது வழக்குப் பதிந்து செல்வபிரபாகரன், கதிரேசனை போலீசார் கைது செய்தனர். –––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us