தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மரைன் போலீசார் கோரிக்கை

மரைன் போலீசார் கோரிக்கை

மரைன் போலீசார் கோரிக்கை


ADDED : நவ 23, 2024 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்; தமிழக கடலோரப் பாதுகாப்பு(மரைன்)போலீசில் ஐந்து ஆண்டுகளாக பணிபுரியும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சிலர் இடமாறுதல் கேட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 48 மரைன் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., க்கள், போலீசார் என 600க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய கடல் பரப்பில் இலங்கை உள்ளது.

ஒரு ஸ்டேஷனில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தால் அவர்களுக்கு இடமாறுதல் அளிப்பது வழக்கம். ஆனால் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மரைன் இன்ஸ்பெக்டர்கள்,எஸ்.ஐ.,க்கள் பணிபுரிகின்றனர். இதனால் கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சிலர் இடமாறுதல் கேட்டு பலமுறை மனுஅளித்தும் அதிகாரிகள்பரிசீலிக்கவில்லை.

எனவே 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அதிகாரிகளை இடமாறுதல் செய்து கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us