ADDED : ஜூன் 11, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் மாசாணி அம்மன் கோயில் விழா ஜூன் 2 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் மூலவருக்கு தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. முக்கிய விழாவான பூக்குண்டம் இறங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விரதம் இருந்த பக்தர்கள் பாரனுார் ஆத்தியடியான் கோயிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர். சிறப்பு தீப அர்ச்சனையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.