UPDATED : நவ 06, 2026 07:12 PM
ADDED : நவ 05, 2026 06:14 PM

அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணிதவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பள்ளி முதல்வர் ஷாநவாஸ் துவக்கி வைத்தார். கண்காட்சியில் இயற்கை கணிதம், கணித பூங்கா, கணித வீடு, கட்டடக்கலை மற்றும் பிதாக்கோரஸ் தேற்ற வகைப்பாட்டு மாதிரிகள் உள்ளிட்டவைகளை அழகுற மாணவர்கள் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.
கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். ஏற்பாடுகளை கணிதவியல் ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் பள்ளி துணைத் முதல்வர் காதர் முகைதீன் பாதுஷா ஆகியோர் செய்திருந்தனர்.
