நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடியில் மார்க்சிஸ்ட் சார்பில் மே தின கூட்டம் காந்தி சிலை முன் நடந்தது. மூத்த நிர்வாகி மோதிலால் தலைமை வகித்தார்.
நகர் குழு உறுப்பினர் முரளி வரவேற்றார். சட்டசபை குழு தலைவர் எம்.எல்.ஏ., நாகை மாலி பேசினார். மாவட்டச் செயலாளர் குருவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மயில் வாகனன், சிவாஜி, ராஜா, வட்டார செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர் செயலாளர் முனியசாமி பங்கேற்றனர். மாவட்ட குழு உறுப்பினர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.