/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூவலுாரில் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை
/
மூவலுாரில் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை
ADDED : அக் 02, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார் கோவில் ஒன்றியம் உதயகுடி மூவலுார் கிராமத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது.
காலை ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி கோ தானம் வழங்கப்பட்டதுடன், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் வறுமையில் உள்ள பெண்களுக்கு சீர் பாத்திரங்கள் தானம் கொடுக்கப் பட்டது.
மேலும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சுவாமிகளின் மடாலயம் இணைந்து கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.
ஏற்பாடுகளை சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மடாலய நிர்வாகத்தினர் செய்தனர்.