/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதவாத சக்திகளுக்கு விஜய்வாய்ப்பு அளிக்க கூடாது ம.தி.மு.க., துரை பேட்டி

ADDED : அக் 31, 2024 03:46 AM
கமுதி: ''தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரியாமல் கூட மதவாத சக்திகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது''என ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வலியுறுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் அவர் கூறியதாவது:
லோக்சபாவில் பேச வாய்ப்பளிப்பதில் உண்மையான ஜனநாயகம் கிடையாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். பாம்பை கையில் எடுத்துள்ளேன் என அவர் சொல்கிறார். அந்த பாம்பு என்பது முதல் எதிரியான பாசிசம். தமிழகத்தில் மக்களை பிளவுபடுத்தும் பாசிசம் ஓர் அணி. அதனை எதிர்க்கும் திராவிட சக்தி மற்றொரு அணி. இதில் ஏதாவது ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தெரியாமல் மதவாத சக்திகளுக்கு அவர் ஒரு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது. அவர் படித்தவர். அனைத்து விஷயங்களும் தெரிந்தவர். சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.