/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்பாலைக்குடி மெயின் ரோட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
/
திருப்பாலைக்குடி மெயின் ரோட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
திருப்பாலைக்குடி மெயின் ரோட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
திருப்பாலைக்குடி மெயின் ரோட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
ADDED : ஆக 27, 2025 12:28 AM
ஆர்.எஸ்.மங்கலம்; திருப்பாலைக்குடி மெயின் ரோடு பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை, திருப்பாலைக்குடி பகுதியில் உள்ள கோழி, ஆடு விற்பனை செய்யும் இறைச்சி கடைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள் திருப்பாலைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அருகிலுள்ள பாலம் வரை மெயின் ரோட்டின் இரு புறமும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இறைச்சி கழிவுகளை நாய்கள் ஆங்காங்கே இழுத்துச் செல்வதால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அவ்வழியாக பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்களில் செல்லும் பயணிகளும் கடும் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.