/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு
/
பாம்பன் பாலத்தில் இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு
பாம்பன் பாலத்தில் இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு
பாம்பன் பாலத்தில் இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு
ADDED : மார் 31, 2025 06:25 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நுழைவில் வியாபாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டுவது தொடர்கிறது.
பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களிலும், அரசு பஸ்களிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இப்புனித தீவுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பாம்பனில் உள்ள கோழி இறைச்சி விற்கும் வியாபாரிகள், கோழி கழிவுகளை பாம்பன் பாலம் நுழைவில் கொட்டுகின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்தபடி பாலத்தை கடந்து செல்கின்றனர். கழிவுகளை உட்கொள்ளும் ஆவலில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. பருந்து, காகங்கள் வட்டமடித்து வருவதால் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. பாலத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை பாயும் என பாம்பன் ஊராட்சி எச்சரிக்கை விடுத்தும், வியாபாரிகள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பாலத்தில் கழிவுகளை கொட்டி அசுத்தம் செய்கின்றனர்.
ரெகுநாதபுரம்
வண்ணாங்குண்டு பொதுமக்கள் கூறியதாவது: ரெகுநாதபுரம், பெரியபட்டினம், வண்ணாங்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிக் கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகளை மூடையாக கட்டி விளைநிலங்கள் மற்றும் ரோட்டோரங்களில் போட்டு செல்வதால் அவற்றிலிருந்து துர்நாற்றமும் புழுக்களும் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
இதனை உண்பதற்காக ஏராளமான நாய்கள் சாலையில் கூட்டமாக சுற்றி திரிகின்றன. எனவே சுகாதார துறையினர் உரிய விழிப்புணர்வு வழிகாட்டுதலை ஏற்படுத்தவும் மீறுபவர் மீது அபராதம் விதிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.