நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்தூர்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் மு.துாரி கிராமத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார டாக்டர் நெப்போலியன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார். முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கி மாத்திரைகள் வழங்கப்பட்டது. முன்னதாக மு.துாரி கிராமத்தில் நீர் நிலைகள், பள்ளி வளாகம் உட்பட பகுதிகளில் சுத்தம் செய்து மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. என்.எஸ்.எஸ்., மாணவர்கள், கிராம மக்கள் உடன் இருந்தனர்.