நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : -தங்கச்சி மடத்தில் மனித நேய மக்கள் கட்சிசார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
த.மு.மு.க., மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை, ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து முகாமை நடத்தினர்.
த.மு.மு.க., மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான், மாநில செயலாளர் முஸ்தாக், தங்கச்சி மடம் முஸ்லிம் ஜமாத் தலைவர் சியாமுதீன் துவக்கி வைத்தனர்.
36 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பரதவர் சமுதாய தலைவர் சாம்சன், பட்டங்கட்டியார் சமுதாய தலைவர் ஜேம்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத்தலைவர் இப்ராஹிம், ம.ம.க., மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம்----- உட்பட பலர் பங்கேற்றனர்.

