ADDED : ஜன 22, 2025 09:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.திருவாடானை, தொண்டி பகுதியில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
எஸ்.பி.பட்டினம் பசீர் கூறுகையில், எஸ்.பி.பட்டினத்தில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் வரை ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உள்ளது. சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி ரத்தம், சளி மாதிரிகளை சேகரித்து எந்த வகையான காய்ச்சல் என்பதை கண்டறிய வேண்டும் என்றார். இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று சுகாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.