ADDED : பிப் 14, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: காரைக்குடி மண்டல போக்குவரத்துத் துறை சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. நேதாஜி தொழிலாளர் பாதுகாப்பு தொழிற் சங்க பொதுச் செயலாளர் மாரியப்பன் கூறியதாவது:
காரைக்குடி மண்டல போக்குவரத்து துறையின் கீழ் 11 பஸ் டிப்போக்கள் உள்ளன. இதில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் துவங்கிய முகாம் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் டிப்போவில் ராக்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது என்றார்.
