நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : துாத்துக்குடி காமராஜ் காலேஜ் அருகில் பக்தி புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் 50. தொண்டி பகுதியில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்வார்.
நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வீரசங்கலிமடம் அருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அதே இடத்தில் இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

