ADDED : நவ 14, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடியில் வணிகர் சங்க ஆண்டு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ரசூல் கான், செயலாளராக சிவசுப்பிரமணியன், பொருளாளராக பாபா குருசாமி தேர்வு செய்யப்பட்டனர்.
சாயல்குடி நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் வாறுகாலின் மீது பாதுகாப்பான மூடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தி பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

