ADDED : ஜூலை 12, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருளை வைத்திருந்த கீழக்கரையை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கீழக்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை எஸ்.என். தெருவை சேர்ந்த முகைதீன் ராசிக் அலி 35, என்பவரிடமிருந்து 2.8 கிராம் மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தை மதிப்பில் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகம். இது தொடர்பாக கீழக்கரை போலீசார் முகைதீன் ராசிக் அலி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த போதை பொருளை உட்கொள்வோரின் நரம்பு மண்டலம் விரைவாக பாதிக்கப்படும்.