ADDED : அக் 27, 2024 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி புது நகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
தாளாளர் முகைதீன் முஸாபர் அலி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் முகமது சீனி பாதுஷா முன்னிலை வகித்தார். பிரைமரி தலைமையாசிரியை ஜெயசுதா வரவேற்றார்.
ஒன்றாம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு மினி மாராத்தான் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. செகண்டரி தலைமையாசிரியர் அணில் நன்றி கூறினார்.