/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கு புதிய டீசல் பங்க் அமைச்சர் துவக்கி வைத்தார்
/
மீனவர்களுக்கு புதிய டீசல் பங்க் அமைச்சர் துவக்கி வைத்தார்
மீனவர்களுக்கு புதிய டீசல் பங்க் அமைச்சர் துவக்கி வைத்தார்
மீனவர்களுக்கு புதிய டீசல் பங்க் அமைச்சர் துவக்கி வைத்தார்
ADDED : டிச 13, 2024 04:11 AM

ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடியில் மீனவர்களுக்கான புதிய டீசல் பங்கை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்களின் நலன் கருதி மீனவர்களுக்கு டீசல் பங்க் அமைக்கப்பட்டது. நேற்று மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இதனை துவக்கி வைத்தார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 13 மீனவர்களுக்கு துறை சார்பில் 57.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கடல் சார் கல்வி பயிலும் 6 மீனவ இளைஞர்களுக்கு ரூ.2.25 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நிதி உதவியுடன் நடைபெற்ற படகு இஞ்சின் பராமரிப்பு பழுது நீக்குதல் மற்றும் உயிர் பாதுகாப்பு சாதன பயன்பாடு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொண்ட 25 மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆழ்கடல் மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கப்பட்டது. பின்னர் திருப்பாலைக்குடியில் நடக்கும் பல்நோக்கு கடற்பாசி பூங்கா கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் கஜலட்சுமி, எம்.எல்.ஏ.,க்கள் காதர் பாட்ஷா, கருமாணிக்கம், முருகேசன், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

