தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாயமான பெண் குழந்தை இறந்த நிலையில் மீட்பு

மாயமான பெண் குழந்தை இறந்த நிலையில் மீட்பு

மாயமான பெண் குழந்தை இறந்த நிலையில் மீட்பு


UPDATED : அக் 26, 2026 08:11 PM

ADDED : அக் 26, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 08:11 PM ADDED : அக் 26, 2026 08:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அகஸ்தியர்கூட்டத்தில் -வீட்டில் துாங்கிய ஒன்றரை வயது பெண் குழந்தை மாயமான நிலையில் ஊருணியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆக்கிடாவலசையைச் சேர்ந்தவர் ராஜசேகர் 35. கூலி வேலை செய்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியர்கூட்டத்தைச் சேர்ந்த இந்துஜாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு பார்கவி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. 18 நாட்களுக்கு முன் இந்துஜாவுக்கு 2வது பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ராஜசேகருக்கும் இந்துஜாவுக்கும் நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்டது. ராஜசேகர் கோபித்துக் கொண்டு சொந்த ஊரான ஆக்கிடாவலசைக்கு சென்றார். ராஜசேகர் பின்னால் மனைவி இந்துஜா, மாமியார் ராதா பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அழைத்தனர். ஆனால் ராஜசேகர் பஸ் ஏறி ஊருக்கு சென்றார். இதனால் இந்துஜாவும், ராதாவும் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டில் துாங்கிய பார்கவியை காணவில்லை. இரவு பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நேற்று காலை வீடு அருகே உள்ள கோயில் ஊருணியில் உதட்டில் சிறிய சிராய்ப்பு காயத்துடன் குழந்தை மீட்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us