/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண் பரிசோதனை செய்ய நடமாடும் வாகன சேவை
/
மண் பரிசோதனை செய்ய நடமாடும் வாகன சேவை
ADDED : ஜூலை 22, 2025 03:34 AM

ராமநாதபுரம்,: மண் பரிசோதனை செய்வதற்கான நடமாடும் வாகன சேவையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு, பராமரிப்பு குறித்த கண்காட்சி நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தார்.
கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர் வேளாண் இயந்திரங்கள் பெறுவது குறித்து விவசாயிகள் அறிந்து கொண்டுபயன்பெற வேண்டும் என்றார். விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
வேளாண் துறை சார்பில் மண் பரிசோதனை செய்வதற்கான நடமாடும் வாகன சேவையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு, சோலார் மின் இணைப்பு மூலம் மேம்பாடு குறித்த செயல் விளக்கம் காட்சிப்படுத்தப்பட்டன.
விளை நிலங்களை உழவு செய்வதற்கும், நெல் நடுவதற்கும், களை எடுப்பதற்கும், வரப்பு கட்டுவதற்கும் எவ்வாறு இயந்திரங்களை கையாளுவது என விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தரிசு நிலங்களில் உழவு செய்வது, பயன்பாடற்ற தென்னை மட்டை, கருவேல மர பொருள்களை அப்புறப்படுத்துவதில் இயந்திரங்களின் பணி விளக்கப்பட்டன.
வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முத்துக்குமார், வேளாண் இணை இயக்குனர் பாஸ்கரமணியன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜினு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

