/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்
/
நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்
ADDED : செப் 28, 2024 06:30 AM

ஆர்.எஸ்.மங்கலம் : கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் மக்கள் பயனடையும் வகையில் கால்நடை மருத்துவமனைக்கு நடமாடும் மருத்துவ வாகன வசதி வழங்கப்பட்டது.
இந்த வசதியைப் பெற 1962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையலாம். ஆர்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி வாரியாக நடமாடும் வாகனம் சென்று அப்பகுதியில் முகாம் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த வாகனத்தில் ஒரு கால்நடை டாக்டர், உதவியாளர் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் ஊசி, மருந்துகள் கெட்டுப் போகாத வகையில் வாகனத்தில் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டு மருந்துகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கால்நடைகளுக்கு பிரசவ காலத்திலும், விஷ பூச்சி கடியால் பாதிக்கப்பட்டாலும், நோய் மற்றும் விபத்துக்களில் சிக்கினாலும், இந்த வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என ஆர்.எஸ்.மங்கலம் கால்நடை டாக்டர் மனிஷா தெரிவித்தார்.