/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாய்மைப் பணிக்கு நவீன இயந்திரம்
/
துாய்மைப் பணிக்கு நவீன இயந்திரம்
ADDED : ஜூலை 30, 2025 11:14 PM

ராமநாதபுரம்; துாய்மைப் பணி மேற்கொள்வதற்காக ரூ.5.5 லட்சத்தில் புதிய இயந்திரத்தை கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
இந்த இயந்திரத்தை சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில் ஆனந்தம் சில்க்ஸ் உரிமையாளர் வடிவேல், 'தியர்டு ஐ' அறக்கட்டளை நிர் வாகிகள் வழங்கினர்.
நிர்வாகிகள் கூறிய தாவது:
சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில் ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் ரூ.5.5 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக்கல் ஸ்வீப்பிங் இயந்திரம் வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தரையில் தேங்கியுள்ள மணல், துாசுவை முற்றி லுமாக அகற்ற முடியும். பெரிய நிகழ்ச்சிகள், கோயில் விழாக்களில் அதிகளவு குப்பை தேங்கும்.
அதை அகற்ற கூடுதல் ஆட்கள் தேவைப்படுவர். அத்தகைய பகுதி யில் இந்த இயந்திரம் மூலம் குறைந்த நேரத்தில் எளிமையாக துாய்மைப் பணி மேற்கொள்ள முடியும்.
சிறியதாக உள்ளதால் வெவ்வேறு பகுதிகளுக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும் துாய்மைப் பணியின் போது துாசி பரவாமல் இருக்க வாகனத்தின் முன்புறம் தண்ணீர் தெளிப்பான் உள்ளது.
வாகனத்தின் பின்புற மும் கூடுதலாக ஒரு தண்ணீர் தெளிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் தரையில் ஒட்டி காணப்படும் கறைகளை அகற்ற முடியும். இந்த வாகனத்தை இயக்க ஒருவர் மட்டும் போதும். இயந்திரத்தை இயக்கும் பொறுப்பும் ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் என்றனர்.

