ADDED : செப் 29, 2026 04:05 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்க இருப்பதால் திருவாடானை தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் திருவாடானை சமத்துவபுரம் மக்களிடையே நடந்தது. மழை வெள்ளப் பெருக்கு காலங்களில் மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகாமல் தடுக்கும் வழிமுறைகள், மின்சார சாதனங்களை கையாளும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
