/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பு: கட்டுப்படுத்த கோரிக்கை
/
மழைநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பு: கட்டுப்படுத்த கோரிக்கை
மழைநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பு: கட்டுப்படுத்த கோரிக்கை
மழைநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பு: கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : டிச 30, 2025 05:19 AM
ஆர்.எஸ்.மங்கலம்: சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.எஸ்.மங்கலம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் செல்லும் வாய்க்கால்கள் முறையான பராமரிப்பு செய்யப்படாததால் பெரும்பாலான வார்டுகளில் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் குடியிருப்பு வாசிகளும், பேரூராட்சி ஊழியர்களும் கடும் சிரமப்படுகின்றனர்.
மழை நின்று ஒரு வாரத்திற்கும் மேலாகிய நிலையிலும், பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளிலும் இன்னும் மழை நீர் தேங்கி உள்ளது.
சீதோஷ்ண நிலை காரணமாக தாழ்வாக உள்ள பகுதிகளில் தேங்கிய மழை நீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் கொசுக்கடியில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம், அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை நீரை முறையாக வெளியேற்றும் வகையில் வாறுகால்களை சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

