/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காந்தி நகரில் பாதியுடன் நிற்கும் தார் சாலையால் மக்கள் அவதி
/
காந்தி நகரில் பாதியுடன் நிற்கும் தார் சாலையால் மக்கள் அவதி
காந்தி நகரில் பாதியுடன் நிற்கும் தார் சாலையால் மக்கள் அவதி
காந்தி நகரில் பாதியுடன் நிற்கும் தார் சாலையால் மக்கள் அவதி
ADDED : டிச 30, 2025 05:19 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி காந்தி நகரில் பாதியுடன் நிறுத்தப்பட்டுள்ள தார்சாலையால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
காந்தி நகரில் ஒன்றரை கி.மீ., தார் சாலையில் ஒரு கி.மீ., மட்டுமே அமைத்துள்ளனர். மீதமுள்ள அரை கி.மீ., தொலைவிற்கு தார் சாலையை போடாமல் அப்படியே பாதியுடன் விட்டு சென்று விட்டனர். கேட்டதற்கு இவ்வளவுதான் திட்ட மதிப்பீட்டுத் தொகை என கூறுகின்றனர்.
இதனால் முறையான தார் சாலை அமைக்காமல் பாதியில் விடப்பட்டுள்ளதால் அப்பகுதி சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாயல்குடியை சேர்ந்த ராஜசேகர பாண்டியன் கூறியதாவது: திட்ட மதிப்பீட்டில் கூறியவாறு முழுமையாக தார் சாலையை முடித்து தரவேண்டும். அதை விடுத்து பாதி தார் சாலை மட்டும் அமைத்து விட்டு மீதமுள்ள இடங்களில் மண்மேவியும், குண்டும் குழியுமாக விட்டுச் சென்றுள்ளதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே சாலை பணியை முழுமையாக முடித்து தருவதற்கு கடலாடி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் மின்கம்பங்களில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது என்றார்.

