ADDED : செப் 25, 2024 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வார்டு வாரியாக கொசு மருந்து புகை அடிக்கும் பணி நடக்கிறது.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தேங்கும் குப்பை, கழிவு நீரால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதையடுத்து கமிஷனர் அஜிதா பர்வீன் உத்தரவில் ஒவ்வொரு வார்களிலும் சுழற்சி முறையில் வாகனத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது.
வீடுகள், அலுவலகத்தில் தேவையின்றி வளர்ந்துள்ள செடி,கொடிகள் மற்றும் குப்பையை அகற்றி சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.