/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கொலை; மகளுடன் கள்ளக்காதலன் கைது
/
சாயல்குடியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கொலை; மகளுடன் கள்ளக்காதலன் கைது
சாயல்குடியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கொலை; மகளுடன் கள்ளக்காதலன் கைது
சாயல்குடியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கொலை; மகளுடன் கள்ளக்காதலன் கைது
ADDED : அக் 01, 2025 08:10 AM

சாயல்குடி; ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் மகளின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு மகளும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
சாயல்குடி காயம்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் 77. இவர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மூத்த மகள் உமாராணியின் வீட்டில் மாடியில் தனியாக வசித்து வந்தார். செப்.,1ல் இரவு வழக்கம் போல் மகளின் வீட்டில் உறங்கிய போது அதிகாலை மாடியில் புகுந்த மர்ம நபர்கள் அவரது கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பினர். சாயல்குடி போலீசார் விசாரித்தனர்.
கொலையாளிகளை கைது செய்ய எஸ்.பி., சதீஷ் உத்தரவின்படி ஏ.எஸ்.பி., குணால் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். ஒரு மாதமாக மகள் உமா ராணியின் செயல்பாடுகளை கண்காணித்தனர். சந் தேகத்தின்படி அவரை விசாரித்தனர்.
இதில் அதே தெருவைச் சேர்ந்த விஜயகுமார் மகன் விக்னேஸ்வர பாண்டியன் 19, என்ற வாலிபருடன் உமாராணிக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரிந்தது. ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த கள்ளத்தொடர்பை ராஜம்மாள் கண்டித்தார். இதனால் அவரை கொலை செய்ய மகளும், கள்ளக்காதலனும் திட்டமிட்டனர்.
செப்.,1ல் அதிகாலை துாங்கிய ராஜம்மாள் முகத்தில் தலையணையால் அழுத்தினர். இதில் மூச்சு திணறியதால் ராஜம்மாள் மயக்கமானார். பின் இருவரும் சேர்ந்து அரிவாள்மனையால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்தனர். உமாராணி, விக்னேஷ்வர பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.