/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : பிப் 13, 2024 04:57 AM

ராமநாதபுரம், : -ராமநாதபுரத்தில் பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள், பயணிகள் வருகைக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாததால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தால் நெரிசலால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.20 கோடி செலவில் சந்தை திடல் வரை விரிவாக்கம்செய்யும் பணி நடக்கிறது.
இதன் காரணமாக இங்கிருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 900 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றன.
இங்கிருந்து ராமேஸ்வரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், கடலாடி பார்த்திபனுார், மானாமதுரை, திருப்புவனம், மதுரை ஆகிய பகுதிகளுக்கும், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதற்கு ஏற்ப பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதியின்றி காலை, மாலை பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 100 மீட்டர் துாரத்தினை கடக்க 15 நிமிடம் வீணாகுகிறது. மெயின் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர்.
இதன் காரணமாக பின்னால் வரும் வாகனங்கள் காத்திருப்பதால், நீண்ட வரிசையில் செல்ல முடியாமல் தத்தளிக்கிறது.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஒரு சில பஸ்களை வெளியிடங்களில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.