sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எந்த கூட்டணியில் இணையலாம் என மா.செ.க்களிடம் கருத்து: ஜன.9ல் அறிவிப்பை வெளியிடும் தே.மு.தி.க.,

/

எந்த கூட்டணியில் இணையலாம் என மா.செ.க்களிடம் கருத்து: ஜன.9ல் அறிவிப்பை வெளியிடும் தே.மு.தி.க.,

எந்த கூட்டணியில் இணையலாம் என மா.செ.க்களிடம் கருத்து: ஜன.9ல் அறிவிப்பை வெளியிடும் தே.மு.தி.க.,

எந்த கூட்டணியில் இணையலாம் என மா.செ.க்களிடம் கருத்து: ஜன.9ல் அறிவிப்பை வெளியிடும் தே.மு.தி.க.,

11


ADDED : ஜன 05, 2026 10:02 PM

Google News

ADDED : ஜன 05, 2026 10:02 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வரும் சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என, மாவட்ட செயலர்களிடம், வாக்கெடுப்பு முறையில், தே.மு.தி.க., தலைமை கருத்து கேட்டுள்ளது. வரும் 9ம் தேதி கடலுாரில் நடக்கும் மாநாட்டில், கூட்டணி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

சென்னை - கோயம்பேடில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வரும் 9ம் தேதி, கடலுாரில் நடக்க உள்ள, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O' ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்கள் என, மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் தங்கள் கருத்தை, கடிதத்தில் எழுதி, அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள், தங்கள் கருத்தை எழுதி, பெட்டியில் போட்டனர்.

பின்னர், கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா அளித்த பேட்டி:

சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி வைக்கலாம் என, மாவட்ட செயலர்களின் கருத்து கேட்கப்பட்டது. பெட்டியில் மாவட்ட செயலர்கள், கடிதம் வாயிலாக தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அந்தக் கருத்துக்களின் அடிப்படையில், வரும் 9ம் தேதி கடலுாரில் நடக்கும் மாநாட்டில், எங்கள் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும்.

அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தேர்தலையொட்டி நிறைய அறிவிப்புகள் வரும். தமிழகத்தில் நான்கு முனை கூட்டணி உள்ளது. இதை தாண்டி இன்னொரு கூட்டணி வருமா எனத் தெரியாது.

அனைத்து கட்சிகளும், தே.மு.தி.க., வுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன. உரிய நேரத்தில், சரியான முடிவை அறிவிப்போம். அடுத்து வரும் ஆட்சியில், கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது.

தி.மு.க., ஆட்சியை அகற்ற, ஒருமித்த கருத்துகளைக் கொண்ட கட்சிகள் இணைய வேண்டும் என, பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை, யார் ஏற்றுக் கொள்கின்றனர், யார் ஏற்கவில்லை என்பதற்கான விடை, கூட்டணி அமையும் போது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us