/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில குத்துச்சண்டை போட்டி முதுகுளத்துார் மாணவி 3ம் இடம்
/
மாநில குத்துச்சண்டை போட்டி முதுகுளத்துார் மாணவி 3ம் இடம்
மாநில குத்துச்சண்டை போட்டி முதுகுளத்துார் மாணவி 3ம் இடம்
மாநில குத்துச்சண்டை போட்டி முதுகுளத்துார் மாணவி 3ம் இடம்
ADDED : பிப் 04, 2025 05:08 AM

முதுகுளத்துார்: மயிலாடுதுறையில் நடந்த மாநில குத்துச்சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பெற்று முதுகுளத்துார் மாணவி நித்திலா வெண்கலப் பதக்கம் வென்றார்.
மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான சிலம்பம், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதுகுளத்துார் கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்திலா மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து மாணவி நித்திலாவை டைகர் பாக்சிங் இன்ஸ்டிடியூட் குத்துச்சண்டை பயிற்சியாளர் பாஸ்கரன், அணி மேலாளர் இயேசுராஜா, பள்ளி நிறுவனர் காந்திராசு, தாளாளர் சந்திரசேகரன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.