/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு அகலப்படுத்தும் பணி மும்முரம்
/
முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு அகலப்படுத்தும் பணி மும்முரம்
முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு அகலப்படுத்தும் பணி மும்முரம்
முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு அகலப்படுத்தும் பணி மும்முரம்
ADDED : ஜன 30, 2024 12:05 AM

முதுகுளத்துார், -முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
முதுகுளத்துாரில் இருந்து காக்கூர் தேரிருவேலி, உத்திரகோசமங்கை, வழி ராமநாதபுரம் செல்லும் முக்கியமான சாலையாகும். இச் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. அதுமட்டும் இல்லாமல் முதுகுளத்துாரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலை என்பதால் தினந்தோறும் அதிகமான வாகனங்கள் செல்கிறது.
இங்கு சாலை குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும்போது சாலையோரத்தில் இறங்கி செல்லும் அபாயம் உள்ளது. இதையடுத்து முதுகுளத்துார் ராமநாதபுரம் சாலை காக்கூர் மற்றும் தேரிருவேலி அருகே சுமார் 2 கி.மீ., துாரத்திற்கு அதிகமாக சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
இதே போன்று முதுகுளத்துாரில் இருந்து காக்கூர், தேரிருவேலி வழியாக ராமநாதபுரம் செல்லும் சாலை முழுவதும் அகலப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.