/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு மங்களேஸ்வரி நகரில் முளைப்பாரி விழா
/
கிழக்கு மங்களேஸ்வரி நகரில் முளைப்பாரி விழா
ADDED : செப் 19, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மங்களேஸ்வரி நகரில் முளைப்பாரி விழா நடந்தது.
செப்.10ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.மூலவர் விநாயகர், மங்களேஸ்வரி அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது.
நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதியுலா வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை கிழக்கு மங்களேஸ்வரி நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.