ADDED : செப் 20, 2026 12:28 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் விஸ்வ கர்மா ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா உற்ஸவமூர்த்தி வருடாபிஷேக விழா, விஸ்வகர்மா ஜெயந்தி விழா, சுந்தர விநாயகர் கோயில் வருடாபிஷேக விழா, 6ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்தனர். சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து விஸ்வகர்மா உற்ஸவமூர்த்திக்கு பாலபிஷேகம், 108 விளக்கு பூஜை நடந்தது.
கணபதி ஹோமம், சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. சுந்தர விநாயகர், விஸ்வகர்மா உற்ஸவமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி பஜார், முருகன் கோயில்,செல்லிஅம்மன் கோயில் உட்பட முக்கிய விதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தண்ணீரில் கரைத்த னர். மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கத்தினர் செய்தனர்.
