ADDED : அக் 13, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே உலகநடை, சேகநாதபுரம் கிராமத்தில் தர்ம முனிஸ்வரர்,சந்தன மாரியம்மன், கருப்பணசாமி கோயில் புரட்டாசி மாதம் முளைப்பாரி பொங்கல் விழா நடந்தது.
இவ்விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் வந்தனர். தர்ம முனீஸ்வரருக்கு சிறப்புபூஜை நடந்தது. கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி துாக்கி சென்று தண்ணீரில் கரைத்தனர். விழாவில் உலக நடை, சேகநாதபுரம், கமுதி சுற்றியுள்ள கிராமமக்கள் பங்கேற்றனர்.