நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சந்தன மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா நேற்று முன்தினம் உற்சாகமாக நடந்தது.
இதனை தொடர்ந்து நேற்று கோயிலில் இருந்து முளைப்பாரி சட்டியை பெண்கள் சுமந்து ஊர்வலமாக சென்றனர். பின் பாம்பனில் உள்ள கவி தீர்த்தத்தில் முளைப்பாரியை கரைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதன்பின் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விழாக் குழு தலைவர் பாலன் முருகேசன், நிர்வாகிகள் அனுமந்தன், முனீஸ்வரன், முனியசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.