/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பு புதிதாக சொத்து வரி விதிக்க லஞ்சம் நகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்
/
குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பு புதிதாக சொத்து வரி விதிக்க லஞ்சம் நகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்
குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பு புதிதாக சொத்து வரி விதிக்க லஞ்சம் நகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்
குடிநீரில் பாதாள சாக்கடை கலப்பு புதிதாக சொத்து வரி விதிக்க லஞ்சம் நகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்
ADDED : செப் 28, 2024 05:56 AM

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் நகராட்சியில் பெயரளவு பராமரிப்பு பணியால் பாதாள சாக்கடையில் வார்டுகள் மிதப்பதோடு குடிநீரில் கலக்கிறது. புதிதாக சொத்துவரி விதிக்க அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
காளிதாஸ், தி.மு.க.,: தனியார் லாரிகளில் வாடகை அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. யாருக்கு வழங்கப்படுகிறது.
தலைவர்: அரசு அலுவலகங்களுக்கு தொய்வின்றி குடிநீர் வழங்க தனியார் லாரி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
குமார், பா.ஜ.,: பாதாளசாக்கடை பராமரிப்பு பணிக்கு ரூ.பல லட்சம் செலவு கணக்கு காட்டப்படுகிறது. எனது வார்டு உட்பட பல இடங்களில் கழிவுநீர் ஓடுகிறது.
தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர் இந்திராமேரி, தி.மு.க., கவுன்சிலர்கள் ராமநாதன், நாகராஜன்,ஜோதிபுஷ்பம், காளிதாஸ் ஆகியோர் பாதாள சாக்கடை பிரச்னையால் மக்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. காவிரி குடிநீரில் பாதாள சாக்கடை கலக்கிறது. மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தற்போதுள்ள ஒப்பந்ததாரரை மாற்ற வேண்டும். நிரந்த தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
தலைவர்: ரூ.6 கோடியில் புதிதாக மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கும் இடங்களில் குழாய் மாற்றப்படுகிறது. ஒரு மாதத்தில் சரியாகிவிடும்.
கமலக்கண்ணன்(எ) ஸ்டாலின், தி.மு.க.,: எனது உறவினர் புதிதாக சொத்துவரி பதிவு செய்வதற்கு அலுவலர்கள் ரூ.13 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கின்றனர். இது தொடர்பாக நான் பேசினால் கூட வெளியூரில் இருந்து வந்துள்ளோம். பார்த்து செய்யுங்கள் என்கின்றனர்.
கவுன்சிலரான என்னால் கூட சொத்து வரி ரசீது வாங்கித்தர முடியவில்லை. அதுவே வெளி நபர்களிடம் பணம் கொடுத்தால் வேலை முடிகிறது. பாதாள சாக்கடை, குடிநீர் பிரச்னையால் வார்டில் தலைகாட்ட முடியவில்லை. மீண்டும் ஓட்டு கேட்டு வராதீங்க என மக்கள் விரட்டுகின்றனர்.
தலைவர்: உங்களிடம் சொத்துவரி விதிக்க பணம் கேட்ட நபர் குறித்து புகார் தாருங்கள். நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல குப்பை அள்ள ஆள் பற்றாக்குறை உள்ளது. வார்டுகளில் ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தலைவர்: வார்டுகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார். நகராட்சி பள்ளிகளில் துாய்மை பணிக்கு, டெங்கு ஒழிப்பு பணிக்கு ஆட்கள் நியமனம். பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்கு நவ., டிச., வரை பணிகள் மேற்கொள்ள 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஒதுக்குதல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.