ADDED : அக் 15, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் ராஜபுஷ்பம் 73. இவரது கணவர் நடராஜன் 2023ல் உயிரிழந்தார். ராஜபுஷ்பம் மகன் அருண் ராஜாவுடன் ஓம்சக்தி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய மகன் அருண்ராஜா தாய் ராஜபுஷ்பம் வீட்டில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தெரிவித்தனர். கேணிக்கரை போலீசார் மூதாட்டியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலைக்கான காரணம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் விசாரிக்கின்றனர்.