
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மாணவி மதுமிதா முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
13.51 மீட்டர் குண்டு எறிந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ள மாணவியை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கல்லுாரி தாளாளர் டாக்டர்சின்னதுரை அப்துல்லா, முதல்வர் பெரியசாமி, சிவில் பொறியியல் துறைத் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன் பாராட்டினர்.