/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகள் கண் முன் தாய் கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
/
குழந்தைகள் கண் முன் தாய் கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
குழந்தைகள் கண் முன் தாய் கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
குழந்தைகள் கண் முன் தாய் கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
ADDED : ஜூலை 18, 2025 08:43 PM

சாயல்குடி:சாயல்குடி அருகே வெட்டுக்காடு கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்து, இரு குழந்தைகள் கண் முன் தாயை வெட்டிக் கொலை செய்த முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் ஊராட்சி, வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெர்மின், 34. இவருக்கும், இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் விஜய கோபால், 40, என்பவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
தம்பதிக்கு, 9 வயது மகள், 7 வயது மகன் உள்ளனர். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் ஜெர்மின் வசித்தார்.
நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு, ஜெர்மின் வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர், ஜெர்மினை அரிவாளால் கழுத்து, இடது கை உள்ளிட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். இதைப்பார்த்த குழந்தைகள் கதறினர். சாயல்குடி போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஜெர்மின் தந்தை மைக்கேல் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், 'இச்சம்பவத்தில் ஜெர்மின் கணவர் விஜய கோபால், குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளது.
'ஜீவனாம்சம் கேட்டு முதுகுளத்துார் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், ஜெர்மினை கொலை செய்துவிடுவதாக விஜய கோபால் மிரட்டி வந்தார்.அவர்களிடம் விசாரித்து கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.