sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை, வாகன விபத்துகள் ராமநாதபுரத்தில் அதிகரிப்பு

/

கொலை, வாகன விபத்துகள் ராமநாதபுரத்தில் அதிகரிப்பு

கொலை, வாகன விபத்துகள் ராமநாதபுரத்தில் அதிகரிப்பு

கொலை, வாகன விபத்துகள் ராமநாதபுரத்தில் அதிகரிப்பு


ADDED : ஜன 01, 2024 05:16 AM

Google News

ADDED : ஜன 01, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு (2023) 37 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இதுபோல வாகன விபத்துகளும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.,தங்கதுரை தெரிவித்துள்ளதாவது:

மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயம் என 2022ல் 840 வழக்குகளும், 2023ல் 784 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

இது கடந்தாண்டை காட்டிலும் 7 சதவீதம் குறைவாகும். 2022ல் 33 கொலைகள், 2023ல் 37 கொலைகள் நடந்துள்ளது.

நான்கு அதிகரித்திருந்தாலும் இவை குடும்ப பிரச்னையால்நடந்தவை ஆகும். பழிக்குப்பழி கொலைகள் நடக்கவில்லை.

2023ல் 84 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது.பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்டுகிறது.

2023ல் 1294 வாகன விபத்துகளில் 410 பேர்இறந்து விட்டனர். 1231 பேர் காயமடைந்துள்ளனர். விதி மீறலில் ஈடுபட்ட 2,27,685 இரண்டு, நான்கு சக்கரவாகனங்கள் மீது மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் வழக்குள்ளது.

வாகன விபத்து 2022ம் ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

2023ல் புகையிலை விற்ற 359 பேர் மீது 348 வழக்குகள் பதிவாகியுள்ளது.

ரூ.13 லட்சத்து16 ஆயிரத்து 588 மதிப்புள்ள 1617 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கஞ்சா விற்ற 123 நபர்கள் மீது 63 வழக்குகள் பதிவாகியுள்ளது.

ரூ.39லட்சத்து 25 ஆயிரத்து 630 மதிப்புள்ள 391கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, 119 பேரின் வங்கிகணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 197 நபர்கள் மீது 105 மணடல் கடத்தல் வழக்குகள், 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லாட்டரி விற்ற 43 வழக்குகளில் 51 நபர்கள் கைதாகியுள்ளனர். 16 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் போலீசில் 33 வழக்குகளில் 5 பேர் கைதாகியுள்ளனர். தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்குகளில் 4 கோடியே 63 லட்சத்து 80 ஆயிரத்து 141 ரூபாய் முடக்கம்செய்யப்பட்டுள்ளது. 3 வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 20லட்சத்து 47 ஆயிரத்து 115 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

578 அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குற்றசம்பவங்கள் குறித்து 83000 31100 என்ற எண்ணில் புகார் தரலாம் என எஸ்.பி., தெரிவித்துள்ளார்.-






      Dinamalar
      Follow us