/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தர்கா கொடிக்கம்பம் அகற்றியதை கண்டித்து முஸ்லிம்கள் மறியல் அதிகாரிகள் சமரசம்

ADDED : மே 04, 2025 05:06 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றிய நகராட்சி ஊழியர்கள் தர்கா கொடி கம்பத்தையும் அகற்றியதால் முஸ்லிம் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்ததால் போராட்டம்கைவிடப்பட்டது.
ராமநாதபுரம் கேணிக்கரை அரசு மகளிர் கல்லுாரி அருகே ஹஜ்ரத் செய்யத் நுார்ஷா காதிரி ஒலியுல்லா தர்ஹா உள்ளது.
நுாற்றாண்டு பழமையான சேதுபதி மன்னர்கள் காலத்தில் இருந்து இந்த தர்ஹா உள்ளது. தர்ஹா முன்பு பெரிய கொடி மரம் இருந்தது.
உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று கொடி மரங்களை அகற்றினர். அப்போது கேணிக்கரை பகுதியில் தர்ஹாவின் கொடி மரத்தையும் அகற்றினர்.
இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம் மக்கள் கேணிக்கரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த தாசில்தார் சேகர், போலீஸ் அதிகாரிகள் முஸ்லிம் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
எந்த அறிவிப்பும் இல்லாமல் கொடி மரத்தை எப்படி அகற்றலாம் என அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே இடத்தில் நேற்று (மே 3) மாலைக்குள் கொடி மரம் அமைத்து தரப்படும் என உறுதி கூறியதால் மறியலை கைவிட்டனர்.இதனால் கேணிக்கரை பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.