ADDED : மே 10, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே அகத்தாரிருப்பு கிராமத்தில் வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் 37ம் ஆண்டு சித்திரை பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.
ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர். காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் அக்கினி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி துாக்கி ஊருணியில் கரைத்தனர். அப்போது அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.