/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொது தண்ணீர் தொட்டி இன்றி முத்துசெல்லாபுரம் மக்கள் அவதி
/
பொது தண்ணீர் தொட்டி இன்றி முத்துசெல்லாபுரம் மக்கள் அவதி
பொது தண்ணீர் தொட்டி இன்றி முத்துசெல்லாபுரம் மக்கள் அவதி
பொது தண்ணீர் தொட்டி இன்றி முத்துசெல்லாபுரம் மக்கள் அவதி
ADDED : பிப் 11, 2025 04:57 AM

ராமநாதபுரம்: பரமக்குடி தாலுகா முத்துசெல்லாபுரம் கிராமத்தில் பொது தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி துவங்கி பாதியில் அப்படியே உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
வேந்தோணி ஊராட்சியை சேர்ந்த முத்துசெல்லாபுரத்தை சேர்ந்த முனியப்பா மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் ஊர் மக்கள் வசதிக்காக வெங்கிட்டான் குறிச்சி கண்மாய் அருகே தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி துவங்கி சிலரது எதிர்ப்பால் பாதியில் விட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் குளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பாதியில் விட்டுள்ள தண்ணீர் தொட்டி பணியை மீண்டும் துவங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.