/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடைகளுக்கு அம்மை நோய் களை இழந்த மாட்டுப்பொங்கல்
/
கால்நடைகளுக்கு அம்மை நோய் களை இழந்த மாட்டுப்பொங்கல்
கால்நடைகளுக்கு அம்மை நோய் களை இழந்த மாட்டுப்பொங்கல்
கால்நடைகளுக்கு அம்மை நோய் களை இழந்த மாட்டுப்பொங்கல்
ADDED : ஜன 18, 2024 05:41 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகரிப்பால், பெரும்பாலான கிராமங்களில் மாட்டுப்பொங்கல் கொண்டாடவில்லை.
திருவாடானை தாலுகாவில் நாட்டுக்கோழி, கறவைமாடுகள், ஆடுகள் வளர்ப்பு குடிசை தொழில் போல் பெருகி வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையால் குளிர் காற்று வீசியது. குளிர்காற்று, மழை, வெயில் என பருவநிலை மாற்றத்தால் ஆடு, மாடுகள் மேய்ச்சல் இடங்களில் சேறும், சகதியுமாக மழை நீர் தேங்கியது. அந்த இடங்களில் கழிவு நீர் கலந்த மழை நீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் தாக்கின. ஆடுகளுக்கு வயிற்று போக்கு (கழிச்சல்) நோய் ஏற்பட்டு உணவு உண்ணமுடியாமல் ஒரே இடத்தில் சுருண்டு படுத்து கிடக்கின்றன. வாய், தாடைகளில் வீக்கம் ஏற்பட்டது.
கால்நடைகளுக்கு கானை நோய் (அம்மை) தாக்கியுள்ளது. இந்த ஆண்டு மாட்டுப்பொங்கலை விமரிசையாக கொண்டாட முடியவில்லை. ஆடுகள் இறப்பு அதிகரித்து வருவதாக பாண்டிகுடி மக்கள் கவலை தெரிவித்தனர்.