/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணி கிடப்பில் திட்டம் நெரிசலுக்கு தீர்வு காண விரைவில் செயல்படுத்துங்கள்
/
ராமேஸ்வரத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணி கிடப்பில் திட்டம் நெரிசலுக்கு தீர்வு காண விரைவில் செயல்படுத்துங்கள்
ராமேஸ்வரத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணி கிடப்பில் திட்டம் நெரிசலுக்கு தீர்வு காண விரைவில் செயல்படுத்துங்கள்
ராமேஸ்வரத்தில் புறவழிச் சாலை அமைக்கும் பணி கிடப்பில் திட்டம் நெரிசலுக்கு தீர்வு காண விரைவில் செயல்படுத்துங்கள்
ADDED : டிச 13, 2025 05:17 AM

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிதாக 7 கி.மீ., புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு ஓராண்டாகியும் நில எடுப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை வேகப்படுத்தி ரோடு பணிகளை துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்கள், அமாவாசை, திருவிழா காலங்களில் ராமேஸ்வரம் சீதா தீர்த்த குளம் முதல் கோயில் மேற்கு வாசல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு உரிய நேரத்திலும், உள்ளூர் மக்கள் பிற இடங்களுக்கு விரைவாக செல்லவும் முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நகர மக்கள், பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேக்கரும்பு அப்துல்கலாம் தேசிய நினைவகம் துவங்கி ராமர்பாதம் வழியாக அக்னிதீர்த்தம் செல்லும் வகையில் 7 கி.மீ.,ல் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கு ரூ.62 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தச்சாலை அமைக்கப்பட்டால் ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். எனவே விரைவில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானத்திடம் இருந்து மதுரை நெடுஞ்சாலை கட்டுமானத்துறையிடம் ராமேஸ்வரம் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டு, அவர்களது மேற்பார்வையில் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இப்பணியை இம்மாதம் முடித்து ரோடு அமைக்கும் பணிகள் துவங்க உள்ளன என்றனர்.

