/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் நாகநாதசுவாமி- சவுந்தர்ய நாயகி திருக்கல்யாணம்
/
நயினார்கோவிலில் நாகநாதசுவாமி- சவுந்தர்ய நாயகி திருக்கல்யாணம்
நயினார்கோவிலில் நாகநாதசுவாமி- சவுந்தர்ய நாயகி திருக்கல்யாணம்
நயினார்கோவிலில் நாகநாதசுவாமி- சவுந்தர்ய நாயகி திருக்கல்யாணம்
ADDED : ஜூலை 30, 2025 11:26 PM
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண விழாவில் சவுந்தர்யநாயகி திருக் கல்யாணம் நடந்தது.
ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில் ஆடிப் பூர விழா ஜூலை 19 துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஜூலை 27 தேரோட்டம், ஜூலை 29 அம்மன் தபசு திருக்கோலம் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு நாகநாதசுவாமி மாப்பிள்ளை திருக் கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சவுந்தர்ய நாயகி அம்பாளுடன் 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன் ஊஞ்சல் நலுங்கு நிகழ்ச்சி நடந்தது.
இரவு சுவாமி மின் தீப அலங்கார ரதத்திலும், அம்பாள் தென்னங்குருத்து சப்பரத்திலும் திருமண கோலத்தில் உலா வந்தனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊஞ்சல் சேவையும், ஆக.,2ல் மஞ்சள் விளையாட்டு நடக்கிறது. ஜூலை 30ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைந்தது.