/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ1.50 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை பறிமுதல்
/
ரூ1.50 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை பறிமுதல்
ADDED : நவ 16, 2024 11:54 PM

ராமநாதபுரம் : தமிழக கடல் பரப்பில் இருந்து இலங்கை மிக அருகில் இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து போதைப்பொருட்கள், பீடி இலைகள், மஞ்சள், கடல் அட்டைகள் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. அதே போல் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இலங்கை கடற்படையினரும், கல்பிட்டியா போலீசாரும் இணைந்து முசல்பிட்டியா பகுதியில் நடத்திய சோதனையில், 18 சாக்கு மூட்டைகளில் இருந்த 4 லட்சத்து 42,680 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
அவற்றை கல்பிட்டியா போலீசில் ஒப்படைத்து தமிழகத்தில் இருந்து கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு, 1.50 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

